×

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இயக்க அதானி நிறுவனம் ஒப்பந்தம்

கொழும்பு: கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி நிறுவனம் கையெழுத்திட உள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள துறைமுகத்தை இயக்கும் அனுமதி பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெயர் அதானி நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை இயக்கும் உரிமை ஏற்கனவே சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு முனையத்தை மேம்படுத்தி இயக்கும் உரிமம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கிடைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அதானி நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரி அமைப்பு மற்றும் ஜான் ஹீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவை இன்று கையெழுத்திட உள்ளன.

காணொளி வாயிலாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே கிழக்கு முனையத்தை இயக்கும் உரிமத்தை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அளிக்க ராஜபக்சே அரசு முன்வந்தது. ஆனால் தொழிலாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

Tags : Adani ,Colombo , Port, Colombo
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...