புரட்டாசி மாதத்தையொட்டி தேவநாதசுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!: அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்..!!

கடலூர்: கொரோனாவை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முந்தைய நாட்களில் ஆலயங்களில் அதிகளவில் பக்தர்கள் கூடுவது தொடர்கதையாகி வருகிறது. கடலூர் திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விஷேச நாட்கள், வெள்ளி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால் இன்று அதிகாலை முதல் கோயிலில் திரண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இலவசமாக மொட்டை போடப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து வரிசையில் நின்று டோக்கன்  பெற்றுக்கொண்ட பக்தர்கள், மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஆலயங்களில் அதிகளவில் பக்தர்கள் கூடுவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

More
>