காங். காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட குலாம் நபி ஆசாத் கோரிக்கை!: ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தியதற்கு கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு..!!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என குலாம் நபி ஆசாத் ஊடகங்கள் வாயிலாக கூறியிருப்பது கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்திருப்பதை அடுத்து கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ஊடகங்கள் வாயிலாக கட்சி தலைமைக்கு இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த செயலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஊடகங்கள் வாயிலாக கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூறியது கட்சி கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என்று அவர் கூறியிருக்கிறார். மாறாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து நேரில் கோரிக்கை வைத்திருக்கலாம் என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: