இன்று நடக்கும் போட்டியில் சென்னைக்கு தடை போடும் முனைப்பில் ஐதராபாத்.!

சார்ஜா: ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 44வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை 10 போட்டியில் 8 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற சென்னை பிளே ஆப் வாய்ப்பை நெருங்கிவிட்ட நிலையில் இன்று வெற்றி பெற்றால் அதனை உறுதி செய்து விடும்.

மறுபுறம் ஐதராபாத் 10 போட்டிகளில் 8 தோல்வியுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து ஆடி வருகிறது. தொடர் தோல்விக்கு பின் கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. அதனை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பிலும், சென்னையின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும் எண்ணத்திலும் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 15 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை 11, ஐதராபாத் 4ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் கடந்த ஏப்.28ம் தேதி மோதிய லீக் போட்டியில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: