×

அட்டப்பாடி அருகே ஆதிவாசி தம்பதி மீது துப்பாக்கி சூடு: தோட்ட உரிமையாளர் கைது

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி தாவளத்தை அடுத்த  பாடவயலை சேர்ந்த ஈஸ்வரசாமி (65). இவர், பாடவயலில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது தோட்டத்துக்கு அருகில் மஞ்சகண்டி பகுதியில் வசிக்கும் நஞ்சன், செல்லி தம்பதியினர் கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். இவர்களது கால்நடைகள் ஈஸ்வரசாமி  தோட்டத்திற்குள் அடிக்கடி புகுந்து விளைச்சல் நிலங்கள், ஊடுபயிர்கள், வாழை மரங்களை சேதப்படுத்தி வருவதாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி நஞ்சன், செல்லி தம்பியினர் மேய்ச்சலுக்காக விடப்பட்ட மாடுகள் ஈஸ்வரசாமி தோட்டத்திற்குள் புகுந்து தோட்டப்பயிர்களை நாசப்படுத்தியதாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரசாமி தனது வீட்டுக்குள் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து ஆதிவாசி தம்பதியினரை நோக்கி சுட்டுள்ளார்.  தப்பியோடிய தம்பதியினர் அங்கிருந்த மரத்துக்கு பின்னால் மறைந்து நின்றதால் உயிர்தப்பினர். இது சம்பவம் குறித்து அகழி போலீஸ் ஸ்டேஷனில் தம்பதியினர் புகார் அளித்தனர். அதன்பேரில், அகழி சி.ஐ மேல்பின்ஜோஸ், எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரசாமியை நேற்று முன்தினம் கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


Tags : Attappadi , Near Attappadi Shooting on aboriginal couple: Plantation owner arrested
× RELATED போதையில் வாலிபர் தற்கொலை...