சென்னை: எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலையை எடுக்க ஒன்றிய அரசை திமுக வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் அனுப்பியுள்ளார்.