×

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கண்ணூர் பல்கலை. பாடத்திட்டத்தில் 'திராவிட தேசியம்'என்ற பெயரில் தந்தை பெரியார் கருத்துக்கள் சேர்ப்பு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கண்ணூர் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் திராவிட தேசியம் என்ற பெயரில் பெரியார் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கண்ணூர் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திராவிட தேசியம் என்ற பெயரில் தந்தை பெரியார் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா பற்றிய கருத்துக்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல் வாக்கர், ஜின்னா, அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த பெருவாரியான இந்துத்துவா கருத்துக்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், சங்பரிவார், சித்தாந்தவாதிகளான தீன்தயாள் உபாத்யாயா, பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகளை நீக்கி கண்ணூர் பல்கலைக்கழக கல்வியியல் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் முதுகலை நிர்வாகவியல் பட்டத்திற்கான 3வது செமஸ்டர் பாடத்திட்டத்தில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வார்கர், வீர சாவர்க்கர், தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து விசாரிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், குழு அமைத்திருந்த நிலையில், சர்ச்சைக்குரிய பாடத்திட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் சிந்தனையாளர்களின் பலதரப்பட்ட பாடங்களை உள்ளடக்கியதன் மூலம் எம்.ஏ. நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புக்கான பாடத்திட்டம் சமநிலையை அடைந்துள்ளதாக கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Kannur University ,Kerala ,Periyar , University of Kannur, Kerala. Curriculum, Periyar Comment
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...