தாமிரபரணி - நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் பணிகள்: ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆய்வு

நெல்லை: தாமிரபரணி - நம்பியாறு வெள்ள நீர் கால்வாய் பணிகளை ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தாமிரபரணி - நம்பியாற்றை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் பாலப் பணிகள் நடந்து வருகின்றன.இந்தப் பணிகளை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் ஆய்வு செய்தார்.பொன்னாக்குடி நான்கு வழி சாலையில் நடக்கும் வெள்ளநீர் கால்வாய் பாலப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை. மேற்கு வட்டாரத் தலைவர் கணேசன், பாளை. தெற்கு வட்டாரத் தலைவர் நளன், நாங்குநேரி வடக்கு வட்டாரத் தலைவர் அம்புரோஸ், மாவட்டச் செயலாளர் செங்குளம்  வேலையா மற்றும் வெள்ளநீர் கால்வாய் பாலப் பணி பொறுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: