×

பெங்களூரு, இன்டர்சிட்டி உள்ளிட்ட நெல்லை வழியாகச் செல்லும் ரயில்களின் நேரங்கள் மாற்றம்: நாளை முதல் அமல்

நெல்லை: நெல்லை வழியாகச் செல்லும் பல்வேறு சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.நெல்லையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், நெல்லை வழியாகச் செல்லும் கன்னியாகுமரி, செந்தூர், மும்பை ரயில்களின் நேரங்கள் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் மேலும் சில ரயில்களின் நேரங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.05, 10.05, 10.25, 10.50, அதிகாலை 01.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 09.00, 09.55, 10.17, 10.40, அதிகாலை 01.00 மணிக்கு புறப்படும். வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 02.00, 03.00, 03.40, 04.05, 04.25, காலை 06.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, அதிகாலை 01.55, 02.55, 03.35, 03.58, 04.20, 05.50 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06861 புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களிலிருந்து இரவு 09.25, 10.15, 10.40, 11.05 மணிக்கு பதிலாக இரவு 09.20, 10.05, 10.28, 10.50 மணிக்கு புறப்படும். வண்டி எண் 06072 நெல்லை - தாதர் சிறப்பு ரயில் கோவில்பட்டி, திண்டுக்கல் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 08.12, 11.05 மணிக்கு பதிலாக காலை 08.10, 11.00 மணிக்கு புறப்படும். வண்டி எண் 06071 தாதர் - நெல்லை சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 06.05, 06.50 மணிக்கு பதிலாக காலை 06.00, 06.45 மணிக்கு புறப்படும்.வண்டி எண் 02627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக 5 நிமிடங்கள் முன்னதாக, நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும். வண்டி எண் 02668 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இரவு 11.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 01.15, 02.45 மணிக்கு பதிலாக, இரவு 11.25, நள்ளிரவு 12.20, அதிகாலை 01.10, 02.30 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06792 பாலக்காடு - நெல்லை பாலருவி சிறப்பு ரயில் கிளிகொல்லூர், கொட்டாரக்கரா, புனலூர் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே இரவு 11.45, நள்ளிரவு 12.08, 12.45 மணிக்கு பதிலாக இரவு 11.40, 11.58, நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும். வண்டி எண் 06012 நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 10.40, 11.55, நள்ளிரவு 12.35, அதிகாலை 01.00 மணிக்கு பதிலாக இரவு 10.35, 11.50, நள்ளிரவு 12.25, 12.48 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06011 கன்னியாகுமரி - நிஜாமுதீன் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கு புறப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Bangalore ,Intercity Nellai , Bangalore, including Intercity Time change of trains passing through Nellore: Effective from tomorrow
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...