×

மக்கள் துன்பப்படும் போது கும்மாளமிடும் தாலிபான்கள்: ராக்கெட் லாஞ்சர்களுடன் படகு சவாரி

காபூல்: ஆப்கானிஸ்தானில் மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் ஏங்கி வரும் நிலையில் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காவில் ஜாலியாக பொழுதை போக்கி வருகின்றனர். ஏ.கே 47, எம் 4 மற்றும் ராக்கெட் லாஞ்சர்களுடன் சகலமாக வளம் வரும் தீவிரவாதிகள் ஏரியில் படகு சவாரி செய்தும் ராட்டினங்களில் சுற்றியும் பொழுதை கழிக்கின்றனர். தாலிபான்களின் இந்த செயல் சொந்த நாட்டு மக்களை இழிவுபடுத்துவதை போல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய வங்கியின் ஒன்றின் தலைவர், தமது நாட்டின் வங்கி அமைப்பு முறையே தகர்ந்து போகும் நிலையில் இருக்கிறது என கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பே அந்நாட்டின் பொருளாதார சூழல் மோசமாகத் தான் இருந்தது.

ஆப்கானிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது, ஆப்கன் நாட்டின் கரன்சியான ஆப்கானியின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, கையில் பணமின்றி தவிக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் வெறும் 5 சதவீத குடும்பங்களிடம் மட்டுமே தினமும் சாப்பிடும் அளவுக்கு உணவு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

தாலிபன்கள் சொல்வதற்கும், அவர்கள் நடந்து கொள்ளும் எதார்த்தத்துக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் இருப்பதை, பெண்கள் குழுக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர். பல பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவோ, பணிக்கு செல்லவோ அனுமதி மறுக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Taliban , The Taliban
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை