×

தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை, சிசு பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தருமபுரி: தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை, சிசு பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியிலான 11 கட்டிடங்கள், ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளது.

இத்தகைய புதிய கட்டிடத்தில் தரைத் தளத்தில் 33 படுக்கைகள், முதல் தளத்தில் 22 படுக்கைகள், இரண்டாம் 95  படுக்கைகள், 4ம் தளத்தில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 200 படுக்கைகள் மூலம் கர்ப்பிணிகள். பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும், 100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 7 ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 7 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனையடுத்து, கால்நடை மருத்துவமனை, வேளாண் விரிவாக்க மையம், கல்லூரி விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.


Tags : Archbishop ,Emergency Care ,Centre ,Dhamapuri ,BC ,Stalin , Dharmapuri, Chief Minister MK Stalin
× RELATED மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி...