×

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களுக்கான திமுக ஆலோசனைக்கூட்டம்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்புரை

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றியம் கச்சூர் கிராமத்தில் பூண்டி 3வது வார்டு வேட்பாளர் காண்டீபன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர்,  ஒன்றிய கவுன்சிலர்கள்  மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிபூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர், பொறுப்புகுழு உறுப்பினர்கள் பகலவன், கதிரவன், வக்கில்கள் அன்புவாணன், வெஸ்லி, பொதுக்குழு உறுப்பினர் அபிராமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூண்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தில்லை குமார் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், பூண்டி ஒன்றியம் 3வது  வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காண்டீபனை வெற்றி பெற செய்வது. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தவைவர்கள் அனந்தேரி,  பேரிட்டிவாக்கம், கலவை, மாம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது, என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


Tags : MLA D.C. Je. Govindrajan , DMK Consultative Meeting for District Councilors, Union Councilors, Panchayat Leaders: MLA DJ Govindarajan Special Speech
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...