கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி: மருத்துவர், நர்ஸ் சஸ்பெண்ட்

தானே: மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்துக்கு உட்பட்ட கல்வா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் யாதவ். இவர் அட்கோனேஷ்வர் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்றார். பெயரை பதிவு செய்த பின்னர் அவர் தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் நின்றார். ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் வரிசையில் நிற்காமல், வெறிநாய் கடிக்கு எதிரான ரேபிஸ் தடுப்பூசி போடும் வரிசையில் தவறுதலாக நின்றார். அங்கிருந்த மருத்துவரும், நர்சும் முறையாக விசாரிக்காமல், அவருக்கு ரேபிஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர்.

தனக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டதாக அறிந்ததும் ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தானே மாநகராட்சியில் புகார் அளித்தார். முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு, சுகாதார நிலையத்தின் பெண் மருத்துவரும், நர்சும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராஜ்குமார் உடல்நிலை சீராக இருக்கிறது.  அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>