×

திருப்பதியில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படவில்லை

திருமலை: ஆந்திராவை சேர்ந்த பக்தர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுவது இல்லை. மேலும், கோயிலுக்கு வரும் இந்து மதத்தை சேராத மற்றவர்களிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் கூட நிபந்தனைகளின்படி பெறுவதில்லை,’ என குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘ முதலில் நீங்கள் எந்த ஊர்?’ என கேட்டார். அதற்கு மனுதாரர், ‘ஆந்திராவை சேர்ந்தவன்,’ என தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதியும் தெலுங்கில் பேசினார். அப்போது, ‘‘நீங்கள் வெங்கடேஸ்வர சுவாமியின் பக்தராக இருந்தால் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மனுவை பட்டியலிட பதிவேட்டில் அழுத்தம் கொடுக்கக் கூடாது.  நாம் அனைவரும் ஏழுமலையானின் பக்தர்கள்,’’ என்றார்.  பின்னர், இந்த மனுவை அடுத்த வாரம் புதன்கிழமை விசாரணைக்கு ஏற்று கொள்வதாக தெரிவித்தார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Tags : Tirupati ,Agam , In Tirupati, pujas are not conducted according to the Agam system
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...