×

குமரியில் வட கிழக்கு பருவமழை காலத்தில் மின் இடர்பாடுகளை சரி செய்ய 9 பொறியாளர்கள் தலைமையில் குழு: அதிகாரி தகவல்

நாகர்கோவில்: குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வை ெபாறியாளர் குருவம்மாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி, மின் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மின் வாரியம் சார்பில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு மின் விபத்துக்களை தவிர்க்க உதவ வேண்டும். கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மின் இடர்பாடுகளை களைய 9 பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளின் போது எந்த நேரமும் முழு வீச்சில் செயல்படும் வகையில் , தயார் நிலையில் பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளனர். பொதுமக்கள்  சில பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

* காற்று மற்றும் மழை காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெ்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.
* மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதை தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ தஞ்ச புக வேண்டாம்.
* இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன்களை பயன்படுத்த கூடாது.  திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவுகள் போன்றவற்றின் அருகில் இருக்க கூடாது.
* மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் அருகில் தண்ணீர் தேங்கி இருந்தால் அருகில் செல்ல வேண்டாம்.
* வீடுகளின் சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால், அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
* மின் ஒயர்களை உரசி செல்லும் மின் கம்பங்களை வெட்ட மின் வாரியத்தை அணுக வேண்டும். தன்னிச்சையாக அவற்றை வெட்டும் நடவடிக்கையில் பொதுமக்கள் யாரும் ஈடுபட கூடாது.
* மின் கம்பங்களின் ஸ்டே ஒயர்களில் ஆடுகள், மாடுகள் கட்டுவது, துணி காய போடுவது,  கூடாரம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
* வீடுகள், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
* மின் நுகர்வோர்கள் தங்கள் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து கட்டிடங்களிலும் மின் கசவு தடுப்பான் கருவியை மின் இணைப்புக்கான சர்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும்.
* மின் கம்பிகளுக்கு பக்கவாட்டில் கட்டிடங்கள் கட்டும் போது போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை மின்வாரிய அலுவலரை தொடர்பு ெகாண்டு உறுதி  செய்ய வேண்டும்.
* வீடுகளில் உள்ள ரெப்ஜிரேட்டர், கிரைண்டர் மற்றும் மின் மோட்டார்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை பயன்படுத்த வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட தரமான மின்சார ஒயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* குறுகலான தெருக்கள், வளைவுகள் அமைந்துள்ள பகுதியில் வீடுகளுக்கு  மின் இணைப்பு வயர்களை ெகாண்டு செல்லும் போது இரும்பு சர்போர்ட் பைக் அமைக்கும் பட்சத்தில் அதை சுற்றி சுமார் 8 அடிக்கு உயரத்துக்கு தரமான பிவிசி பைப்புகளை காப்பாக அமைக்க வேண்டும்.
* கனரக வாகனங்களை மின் கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடாது.
* பொதுமக்கள் மின் சம்பந்தமான குறைபாடுகளை மின்னகம்  94987 94987 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். மின் தடை நீக்க மைய தொலைபேசி எண் 1912 ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags : Eastern ,Kumari , Northeast monsoon, power outage, group
× RELATED தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட,...