×

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொரோனா மரணத்தில் புதிதாக 8000 பேர் சேர்ப்பு: கேரள அரசு நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பட்டியலில் 8000 ேபர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகமாக உள்ளது. அதே போல் மரணம், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் இங்கு தான் கூடுதலாக உள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு வரை தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 11,196 பேருக்கு புதிதாக தொற்று பரவியது. 149 பேர் மரணமடைந்தனர். தொற்று சதவீம் 11.60 ஆகும். நேற்றைய கணக்கின்படி சுமார் 1.5 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே கேரளாவில் கொரோனா மரணங்களை மறைப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டசபையிலும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் புகார் எழுப்பினர். கொரோனா நெகட்டிவ் ஆன பிறகு இறப்பவர்களை கொரோனா மரண கணக்கு பட்டியலில் சேர்ப்பதில்லை என்ற  குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. தேசிய அளவிலும் இந்த புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொரோனா நெகட்டிவ் ஆகி ஒரு மாதத்திற்குள் மரணம் அடைந்தாலும் அதை கொரோனா மரண பட்டியலில் சேர்க்க வேண்டும். மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து கேரளாவில் புதிய மரண கணக்கு பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 8000 பேரின் மரணம் இந்த புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. நேற்று வரை கொரோனா பாதிக்கப்பட்டு 24,810 பேர் இறந்ததாக அரசு அதிகாரபூர்வமாக அதிகரித்து உள்ளது. தற்போது மேலும் 8 ஆயிரம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தொட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்ைக மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் அனைவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகை கொடுக்க வேண்டும். ஆகவே ரூ.164 கோடிக்கு மேல் அரசு கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Supreme Court ,Kerala government , Supreme Court, Corona, Government of Kerala, Action
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...