×

நாகையில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 4 பேர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

நாகை: நாகையில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 4 பேர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துகின்றனர். சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். குணசீலன், சதீஷ், சிவச்சந்திரன், மற்றொரு குணசீலன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கீச்சாங்குப்பம், சேவாபாரதியில் உள்ள 4 பேர் வீடுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்துகின்றனர். நாகை மீனவன் என்ற பெயரில் யூடியூப் நடத்தி வந்த 4 பேரும் இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக புகார் எழுந்தது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் 4 பேருக்கு தொடர்பு உள்ளதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Nagala , Cannabis
× RELATED நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில்...