×

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குடியிருப்புகளை சுற்றி உப்பளங்கள் அமைக்கப்படுவதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக கிராம மக்கள் புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குடியிருப்புகளை சுற்றி உப்பளங்கள்  அமைக்கப்படுவதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வேம்பார், குஞ்சையாபுரம், முத்தையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் 2016-ம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்று உப்பளங்கள் அமைக்கும் பணியை தொடங்கியது.

இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டாலும், தற்போது பெரியசாமியாபுறம், பச்சையாபுறம் கிராமங்களில் குடியிருப்புகளை சுற்றி உப்பளங்கள் அமைக்கப்பட்டுவருவதால் குடிநீர் ஆதார பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

400 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று கிராமமக்கள் கூறினார். வட்டாச்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தியில் எடுக்கப்பட்ட முடிவை மீறி மீண்டும் உப்பளங்கள் அமைக்கப்படுவது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஒருகிராமத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவிற்குள் உப்பளங்கள் இருக்க கூடாது என்ற அரசு விதியை மீறி புறம்போக்கு நிலத்தில் அவை அமைக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Vladikulam ,Thutaludi , Thoothukudi, Vilathikulam, housing, salinities, water scarcity
× RELATED விளாத்திகுளத்தில் ரத்ததான முகாம்