பெங்களூருடன் ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பு காலி

துபாய்:  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடக்கும் 43வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. கோஹ்லி தலைமையிலான பெங்களூரு 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். கடைசி போட்டியில் மும்பையை வீழ்த்திய உற்சாகத்தில் களம் காண்கிறது. மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் ஆல்ரவுண்டராக ஜொலித்தார். இன்று அவர் 18 ரன் எடுத்தால் டி20 போட்டிகளில் 7ஆயிரம் ரன் இலக்கை அடைவார். மறுபுறம் ராஜஸ்தான் 10 போட்டிகளில் 4 வெற்றியுடன் 8 புள்ளி எடுத்து 7வது இடத்தில் உள்ளது.

இன்று தோல்வி அடைந்தால் பிளேஆப் சுற்று வாய்ப்பு பறிபோகும் என்பதால் வாழ்வா-சாவா நிலையில் களம் இறங்குகிறது. கேப்டன் சஞ்சுசாம்சனை தவிர யாரும் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. பந்துவீச்சில் முஸ்தபிகூர் ரஹ்மான் மட்டும் பார்மில் உள்ளார். இரு அணிகளும் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெங்களுரு 11, ராஜஸ்தான் 10ல் வென்றுள்ளன. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் கடந்த ஏப்.22ம் தேதி மோதிய போட்டியில் பெங்களூரு 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Related Stories:

More
>