×

செவிலியர் சேவை செய்த ஸ்விட்சர்லாந்து நாட்டு பெண் : இறந்த பின் அஸ்தியை சென்னையில் கரைக்க விருப்பம்;விருப்பத்தை நிறைவேற்றிய தொண்டு நிறுவனங்கள்!!

சென்னை : சென்னையில் குடிசை பகுதிகளில் சேவை செய்த 84 வயது செவிலியர் ஒருவர் ஸ்விட்சர்லாந்தில் காலமானார். அவரது அஸ்தி விமானத்தில் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்து நாட்ச் சேர்ந்த பர்னாஸ் கனி ஜெய்னா என்ற பெண்மணி 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் செவிலியராக பணிபுரிந்தார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள குடிசை பகுதிகளுக்கு சென்று சேவை செய்துள்ளார். வயது முதிர்வு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்விட்சர்லாந்து திரும்பிய செவிலியர் ஜெய்னா கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வசித்த வீட்டிலேயே காமானார்.

தாம் இறந்த பின்பு அஸ்தியை சென்னை எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி அவரது அஸ்தி ஸ்விட்சர்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தது. இதனை பெற்றுக் கொண்ட தொண்டு நிறுவனங்கள் பாலவாக்கம் - மாமல்லபுரம் கடலில் பெண்மணி அஸ்தியை கரைத்தனர்.மேலும் வியாசர்பாடியில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.செவிலியர் ஜெய்னா வியாசர்பாடி, சைதாப்பேட்டை, துரைப்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிசை பகுதிகளில் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார். வியாசர்பாடியில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி அதனை அரசிடம் ஒப்படைத்ததையும் தொண்டு நிறுவனத்தினர் நினைவுக் கூர்ந்தனர்.84 வயது செவிலியர் அஸ்தியை கடலில் கரைத்த போது, அங்கு வந்திருந்த பெண்கள் கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


Tags : Chennai , சென்னை,செவிலியர் ,ஸ்விட்சர்லாந்து
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...