ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வணிக விமானங்களை மீண்டும் தொடங்க இந்தியாவுக்கு தாலிபான்கள் கோரிக்கை

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வணிக விமானங்களை மீண்டும் தொடங்க வணிக விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரலுக்கு தாலிபான் இஸ்லாமிய எமிரேட் கடிதம் எழுதியுள்ளது. இதனை வணிக விமான போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்தது வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூலுக்கான அனைத்து வணிக விமான சேவைகளையும் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் இந்தியா நிறுத்தியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்த தினத்தில் இருந்து தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகளை எடுத்து வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தலிபான்கள் ஆப்கான் தலைநகர் காபூலை கைப்பற்றியதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி, ஆப்கான் நாட்டு மக்களும், தாலிபான்கள் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து வெளியேற முயற்சித்தனர். ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேற்றத்திற்கு எதிராக தாலிபான்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிதனுடன் விமான போக்குவரத்து சேவையை நிறுத்து கொண்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 30ம் தேதி, அமெரிக்க ராணுவம்  முழுவதுமாக வெளியேறியதையடுத்து, காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்தது. அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக தாலிபான் அரசு கூறியுள்ளது.

எனவே தாலிபான்கள் சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காபூலுக்கு வணிக விமான சேவையை மீண்டும் தொடங்க இந்தியாவுக்கு தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>