நத்தம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

நத்தம்: நத்தம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சியில் டி.நகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்காக அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் பூமிக்கடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் ஆங்காங்கே வெளியேறி வீணாகிறது. இதனால் மற்ற பகுதிகளில் குடிநீர் சீராக விநியோகம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: