×

வரும் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஜலசமாதி அடைவேன் : அயோத்தி சாமியார் மிரட்டல்!!

அயோத்தி : இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும், அவ்வாறு அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன் என ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாதுவாக இருப்பவர் மஹந்த பரமஹன்ஸ் தாஸ். இவர் 3 வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தி இருந்தார். இதன்மூலம், சற்று பிரபலமான இந்த சாது கடந்த ஆண்டு மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

இதற்காக அவர், அயோத்தியின் ராம் ஜானகி கோயிலின் முன்பாக அமர்ந்தவாறு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி  நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் , வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன் என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags : India ,Jalasamadhi ,Ayodhya ,Samiyar , இந்தியா,ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்
× RELATED ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர்...