அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு!!

சென்னை : ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபு, ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகம் உள்ளிட்டோரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழக சமூக நலத்துறை அமைச்சராக 1991 – 1996 காலக்கட்டத்தில் இருந்தவர் இந்திரகுமாரி. அந்த சமயத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை ரூ.15.45 லட்சம் ஒதுக்கீடு செய்தது.  இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று அப்போதைய சமூக நலத்துறை செயலாளர் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்பட 5 பேர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னையிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், அனைத்து வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட இருந்த நிலையில் நீதிபதி அலிசியா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகிய 3 பேரை குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. அதே சமயம் வெங்கடகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம்

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாருக்கும் அவரது கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி அலிசியா உத்தரவிட்டார்.

மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>