×

சாதாரண மக்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள`கலைஞரின் வரும் முன் காப்போம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஏ தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்ட முகாமில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். பின்னர் அதிமுக ஆட்சி வந்தபோது, இத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. தற்போது, இந்த திட்டம் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்’ என்ற பெயரில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில் சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வாழப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் 1,250 மருத்துவ முகாம்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குடல் நோய் மற்றும் குழந்தைகள் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், தோல் மருத்துவர், இருதய மருத்துவர், சிறுநீரக மருத்துவர், நரம்பியல் மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு உடலில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். இதில் சர்க்கரை, புற்றுநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் கண்டறியப்படுபவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ உதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin , கலைஞரின் வரும்முன் காப்போம்,முதல்வர் மு.க.ஸ்டாலின்
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...