×

டெல்லி பள்ளிகளில் இன்று முதல் அனைத்து வகுப்புகளிலும் தேசப்பக்தி பாட திட்டம் அமல்!!

டெல்லி : டெல்லி மாநிலத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இன்று முதல் அனைத்து வகுப்புகளிலும் தேசப்பக்தி பாட திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முதன்மைச் செயலாளர் (கல்வி) எச் ராஜேஷ் பிரசாத் ஆகியோர் தேசப்பக்தி பாடத்திட்டத்தைத் மூவர்ணக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தனர். இதன் மூலம் டெல்லியில் உள்ள 1,030 அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேசப்பக்தி பாட திட்டம்
அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,வாரம் முழுவதும் அனைத்து நாட்களிலும் தேசப்பக்தி பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறினார். இதன் மூலம் தேச பக்தி உள்ள பொறியாளர்கள், மருத்துவர்கள் உருவாக்கப்பட உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் இல்லாமல், நாட்டிற்காக சேவையாற்றும் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் முதல்வர் எடுத்துரைத்தார்.

நாட்டுப்பற்றை உருவாக்கும் சூழலில் கல்வி கற்பிக்கப்பட தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.இதன் மூலம் நாட்டை கட்டமைக்கும் பணியில் மாணவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.




Tags : Delhi ,Amal , டெல்லி,தேசப்பக்தி, பாட திட்டம் ,அமல்
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...