அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் : இந்தியா அழைப்பு

நியூயார்க் : அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையில் அணு ஆயுத ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஸ்ரீங்கலா, போர் மூண்டால் அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று கூறியுள்ளார்.மேலும் அணு ஆயுதம் பலம் இல்லாத நாட்டுக்கு எதிராகவும் இந்தியா அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

அணு ஆயுதம் இல்லாத உலகம் உருவாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய  ஹர்ஷவர்தன் ஸ்ரீங்கல, அணு ஆயுத ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஐ.நா. பொது சபையின் 76வது ஆண்டு கூட்டத்தில் அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு நாட்டு தலைவர்கள் வலியுறுத்தினர். அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா அண்மையில் பரிசோதனை செய்தது.மேலும் இந்தோ - பசிபிக் அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்கா தர முன் வந்தது உலக நாடுகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>