பணி நிரந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது செவிலியர்கள் போராட்டம்

சென்னை: பணி நிரந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இரவிலும் நீடித்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கபட்ட தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இரவு வரை போராட்டம் தொடர்ந்ததில் 2 பேர் மயக்கமடைந்தார்.

போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இரவு வரை போரட்டம் நீடித்த நிலையில் பிறகு திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதித்தியளித்தனர்.

இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு செவிலியர்கள் களைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

Related Stories:

More
>