தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வாக்குச்சாவடியில் நுழைவது முதல் வாக்குப்பதிவு நிறைவு செய்து வெளியேறும் வரை கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து, எளிதாக மக்கள் புரியும் வகையில்,   மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையும், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள், மாணவிகள், கிராம மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories:

More
>