லட்சுமி பங்காரு கல்லூரியில் இணையவழி பயிலரங்கம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊடக தமிழ் என்னும் தலைப்பில், ஒரு நாள் இணையவழி பயிலரங்கம் நடந்தது. கல்லூரி தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பூபாலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் பேராசிரியர் நசீமா யாழினி, காணொலி காட்சி மூலம் பேசுகையில், ‘தாய் மொழியின் தொன்மை மற்றும் நவீனம் குறித்து ஊடக தமிழிலுள்ள நடைமுறை பயன்பாட்டையும் அதிலுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவ, மாணவிகள் இடையே விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மெகந்திபிரியா, சபர்மதி உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நிறைவாக தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

Related Stories:

More
>