காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் ஸ்லோகன் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் விழாக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரைடல் பெஸ்டிவல் ஸ்லோகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஜோஸ் ஆலுக்காஸ் காஞ்சிபுரம் கிளை மேலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை மேலாளர் பிரவீண் வரவேற்றார்.  ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்.19ம் தேதி வரை பிரைடல் பெஸ்டிவல் ஸ்லோகன் போட்டி நடந்தது. பிரைடல் பெஸ்டிவலை முன்னிட்டு இங்கு உலகம் தரம் வாய்ந்த டிசைனர் பிரைடல் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

பிரைடல் வாடிக்கையாளர்களுக்கு 35% தள்ளுபடி, டைமன் நகைகளுக்கு 20% தள்ளுபடி மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் ஸ்லோகன் போட்டியும் நடந்தது. இந்த ஸ்லோகன் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டாக்டர் ஆனந்தகுமார், டாக்டர் ரக்ஷா ஆனந்தகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முதல் வாரம் தேவிகா மிக்ஸி, 2வது வாரம் சுமதி வாஷிங்மெஷின், 3வது வாரம் ஜெயலட்சுமி புருஷோத்தமன் பிரிட்ஜ், 4வது வாரம் பரமசிவம் டிவி என பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் ஹரி நாராயணன் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: