×

3 மக்களவை, 30 பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 30ல் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று, வெள்ளம், பண்டிகை, குளிரான சூழ்நிலைகள் என பல்வேறு காரணங்களை ஆராய்ந்தும், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துக்களை கேட்டறிந்தும், பல்வேறு மாநிலங்களில் தற்போது காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.  நவம்பர் 2ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.  

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி, ம.பி. உள்ள கந்த்வா மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும். இதேபோல், ஆந்திராவில் 1, அசாம் 5, பீகார் 2, அரியானா 1, இமாச்சலப் பிரதேசம் 3, கர்நாடகா 2, மத்தியப் பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 3, மிசோரம் 1, நாகாலாந்து 1, ராஜஸ்தான் 2, தெலங்கானா 1 மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும்.


Tags : Lok Sabha ,Election Commission , By-elections for 3 Lok Sabha and 30 Assembly constituencies on October 30: Election Commission announcement
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...