முதல் இடத்தை இழந்தார் மிதாலி

மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் (38) முதல் இடத்தில் இருந்தார். ஆஸி.க்கு எதிராக 3 போட்டியில் 87 ரன் மட்டுமே (சராசரி 29.00) எடுத்த நிலையில், நேற்று வெளியான பட்டியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸி. வீராங்கனைகள் லிஸல் லீ அதே முதல் இடத்திலும், அலிஸா ஹீலி 2வது இடத்திலும் தொடர்கின்றனர். இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே தொடரில் கலக்கிய ஆஸி. வீராங்கனை பெத் மூனி டாப் 10  இடங்களுக்குள் முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகம் ஜுலன் கோஸ்வாமி (38), 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையிலும் அவர் 10வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Related Stories:

More
>