மும்பைக்கு 136 ரன் இலக்கு

அபுதாபி: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் தொடக்க வீரர்கள் கேப்டன் கே.எல்.ராகுல், மன்தீப் சிங் முதல் விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தனர். மன்தீப் 15 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த அதிரடி வீரர் கிறிஸ் கேல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, பூரன் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பஞ்சாப் அணி 48 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், மார்க்ரம் - ஹூடா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது. மார்க்ரம் 42 ரன் (29 பந்து, 6 பவுண்டரி), ஹூடா 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. பிரார் 14, எல்லிஸ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் போலார்டு, பும்ரா தலா 2, க்ருணால், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

Related Stories:

>