×

அண்ணா பல்கலையின் புதிய பதிவாளர் யார்?

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான சிண்டிகேட் குழு கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட வேல்ராஜ் தலைமையில் 263வது சிண்டிகேட் குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களான உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்பக்  கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா,  தனியார் கல்லூரிகள் சார்பில் கிஷோர்,  மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போதைய பதிவாளரான ராணி மரிய லியோனி வேதமுத்து பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய பதிவாளரை தேர்வு செய்வது பற்றி நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்ட மாற்றம், தேசிய கல்விக்கொள்கை, பேராசிரியர் நியமனம், நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



Tags : Anna University , Who is the new Registrar of Anna University?
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!