அக்.2ம் தேதி காந்தி பிறந்த நாளன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி: அரசு அறிவிப்பு

சென்னை:  தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் நாளில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டித் தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். பேச்சுப் போட்டியில் பங்கேற்கும்  மாணவர்களை பள்ளி தலைமையாசிரியரும், கல்லூரி முதல்வரும் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்ப வேண்டும். பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் இருவர் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுதொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும். போட்டி வருகிற 2ம் தேதி நடைபெறும்.

பள்ளிப்போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். வட சென்னையில் தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி பெரம்பூரிலும். தென் சென்னையில் ராமகிருஷ்ணா மடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  தியாகராய நகரிலும், மத்திய சென்னையில் குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  மயிலாப்பூரிலும் நடைபெறும். கல்லூரிப்போட்டிகள் 2ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். வட சென்னையில் அம்பேத்கர் கலைக் கல்லூரி வியாசர்பாடியிலும், தென் சென்னையில் சென்னை மாநிலக் கல்லூரி, சேப்பாக்கத்திலும், மத்திய சென்னையில் சென்னை பாரதி மகளிர் கலைக் கல்லூரி பிராட்வேயிலும் நடைபெறும். கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும்.

Related Stories:

>