கோ-ஆப்டெக்சில் விற்பனை நேரம் மாற்றம்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

சென்னை: கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை:   பண்டிகை கால விற்பனையை முன்னிட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 105 விற்பனை நிலையங்களில் மாநகர பகுதிகள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் 64 விற்பனை நிலையங்களின் அலுவல் நேரத்தை மட்டுமே காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரையும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலுவல் நேரம் 8 மணி நேரம் என்ற அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பிற ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் விற்பனை நிலையங்கள் அனைத்தும் பழைய நிலையிலேயே அதாவது இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் ஆகஸ்ட் 2021 வரை ரூ.7.70 கோடி  விற்பனை அதிகரித்துள்ளது.

Related Stories:

More
>