×

உள்ளாட்சி தேர்தலில் காங்., வெற்றிவாய்ப்பு குறித்து நேரில் ஆய்வு: கே.எஸ்.அழகிரி சுற்றுப்பயணம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் நிர்வாகிகள் கூட்டங்களில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு, செங்கல்பட்டு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை குரோம்பேட்டையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். காலை 11 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை பெரும்புதூரிலும், மதியம் 1 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளை சோளிங்கரிலும், மாலை 4 மணிக்கு வேலூர் மாவட்ட நிர்வாகிகளை பேரணாம்பட்டிலும், மாலை 6 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளை ஆம்பூரிலும் சந்திக்கிறார்.

அன்று இரவு ஆம்பூரில் தங்குகிறார். 30ம்தேதி காலை காலை 11 மணிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகளை செஞ்சியிலும், மதியம் 1 மணிக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட நிர்வாகிகளை விழுப்புரத்திலும், மாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளை கள்ளக்குறிச்சியிலும் சந்தித்து ஆய்வு நடத்துகிறார். 3ம் தேதி காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலும், மாலை 5 மணிக்கு தென்காசி மாவட்டத்திலும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.


Tags : K. S. Brunette , KS Alagiri tour: Congratulations on the chances of victory in the local government elections
× RELATED முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்க...