ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு 100 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது: மூத்த தலைவர் ஹரீஷ் சவுத்ரி தகவல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு, 100 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் சவுத்ரி தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் தலைமை மாற்றம் போல், ராஜஸ்தானிலும் நடைபெறும் என்று பரவலாக பேசப்படும் நிலையில், அதனை அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் சவுத்ரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ராஜஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.

அதனால், பஞ்சாப் போன்ற நிலைமை ராஜஸ்தானில் நடக்காது. பஞ்சாப்பையும், ராஜஸ்தானையும் தொடர்புபடுத்தி பேசவேண்டியது இல்லை. ராஜஸ்தான் மாநில பிரிவில் எந்தவொரு உட்கட்சிப் பிரச்னையும் இல்லை. தலைவர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை பேசித் தீர்க்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தது வழக்கமான ஒன்றுதான்.

சச்சின் பைலட்டை பொருத்தமட்டில் காங்கிரஸ் குடும்பத்தில் ஒருவர். ராகுலுடனான சந்திப்பு இயற்கையான ஒன்றுதான்’ என்றார். இருந்தும், கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் ெடல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: