மின்னல் தாக்கி 9 பேர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்

ேபாபால்: மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் மின்னல் தாக்கிய சம்பவத்தில், 7 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் மற்றும் அகர் மால்வா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. திவாஸ் மாவட்டம் பாம்னி கிராமத்தில் மின்னல் தாக்கிய மூன்று தனித்தனி சம்பவங்களில் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் தாக்குதலுக்கு ஆளாகினர். அவர்களில், ஆறு பேர் பலியாகினர்.

இதேபோல், அகர் மால்வா மாவட்டத்தில் நல்கேடாவில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் மின்னல் தாக்கியதில் இறந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘திவாஸ் மற்றும் அகர் மால்வா மாவட்டங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் மாநில அரசால் வழங்கப்படும்’ என்றார்.

Related Stories:

More
>