ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசில் இணைந்தனர் கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி

டெல்லி: குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கன்னையாகுமார் காங்கிரசில் இணைந்தனர். ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் இளம் தலைவர்கள் ஜிதன்பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ் உள்ளிட்டோர் விலகினர். இதனால், பிரசாரத்துக்கு வலுவான இளம் தலைவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஜேஎன்யு மாணவரான கன்னையா குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தனர். முன்னதாக கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானிகாங்கிரசில் இணைவதை வரவேற்கும் வகையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More