×

உத்தரகாண்ட் எல்லைக்குள் 50 குதிரைகளோடு நுழைந்த 100 சீன வீரர்கள்.. பல்வேறு கட்டமைப்புகளை சேதப்படுத்தி சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்

டெஹ்ராடூன் : உத்தரகாண்ட் மாநில எல்லைப் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவம் பல்வேறு கட்டமைப்புகளை சேதப்படுத்தி சென்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு குறைந்துள்ளது. இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம் எல்லை வழியே இந்தியாவுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி சுமார் 100 சீன குதிரை வீரர்கள் எல்லைப் பகுதியான பாராஹோட்டி வழியாக சுமார் 5 கிமீ தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள ஒரு பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகளை சீன வீரர்கள் சேதப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலை அறிந்து இந்திய படைகள் விரைந்து வருவதற்குள் சீன வீரர்கள் 100 பேரும் வந்த வழியாக மீண்டும் சீனாவிற்கு நுழைந்துவிட்டதாக எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் இயல்பு நிலை திரும்பியதில் சீனாவின் பார்வை உத்தரகாண்ட் எல்லை மீது விழுந்து இருப்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது

Tags : Uttarakhand , உத்தரகாண்ட்,சீன ராணுவம்
× RELATED உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட...