×

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அக்டோபர் 2ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு : ஷாக்கிங் ரிப்போர்ட்!!

சென்னை : வடமேற்கு வங்கக்கடலில் புதிய c இன்று காலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி வரை பரவலாக மழை இருக்கும். தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் கலியல் 17 செ.மீ, குழித்துறை 15 செ.மீ, சூரலக்கோடு 14 செ.மீ, தக்கலை 13 செ.மீ, நாகர்கோவில் 12 செ.மீ, மைலாடி 11 செ.மீ, கொட்டாரம் 9 செ.மீ, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி 8 செ.மீ, வால்பாறை, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ என அதிகபட்சமாக மழை பதிவானது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வருகிற 30-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம். அதேபோல் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.2ம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்று தென்கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி ,கேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Bay of Bengal , காற்றழுத்த தாழ்வு பகுதி
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...