×

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. வேலு என்ற சிறைக்கைதியின் ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டிருந்தனர். மராட்டியம், கர்நாடகாவை போல் ஏன் ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணைக்கு வந்த போது ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் அளித்தார். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், புதிய சட்டம் வந்தால் ரவுடிகளை காவல்துறையால் ஒழிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர். கைதி வேலு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Supreme Court ,Tamil Nadu Government , New law to eradicate rowdies
× RELATED ஜாபர்சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு