வேலூர் கோட்டை அகழியில் குதித்து இளம்பெண் தற்கொலை

வேலூர் : வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சந்தியா(22), தனியார் மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் வேலை செய்து வந்தார். சம்பளம் குறைவாக தருவதால் வேலைக்கு செல்ல வேண்டாம் என அவரது தாயார் கூறினாராம். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த சந்தியா, வீட்டில் இருந்து வெளியேறி கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இதையறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என சந்தியா எழுதிய கடிதம் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More
>