மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமனுக்கு மிரட்டல் விடுத்ததற்கு சுப.உதயகுமார் கண்டனம்

நெல்லை: மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமனுக்கு மிரட்டல் விடுத்ததற்கு சுப.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஜெயராமனை நாம் தமிழர் கட்சியினர் மிரட்டி அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சுப.உதயகுமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஜெயராமன் மீது கொலை முயற்சி புகார் ஒன்றையும் நாம் தமிழர் கட்சி அளித்திருப்பதற்ககு சுப.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராக ஜெயராமன் போராடி வருவதாக சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதிப்புக்குரிய ஆளுமையான ஜெயராமனை நாம் தமிழர் கட்சி துன்புறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று சுப.உதயகுமார் கூறியுள்ளார்.

Related Stories:

More
>