தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் 2பெண்கள் தற்கொலை முயற்சி

தென்காசி : ஆய்குடி சக்திநகரை சேர்ந்த எட்வின் சேவியர் மனைவி ரெஜினா ராணி (41). இவர் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு அரசு தனக்கு வழங்கிய இலவச வீட்டுமனையை வேறு ஒரு நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக வாயிலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து வந்து ரெஜினாவின் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

அதனை தொடர்ந்து தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அவர் வழங்கினார். மேலும் வீராணத்தை  சேர்ந்த சண்முகத்தாய் என்ற பெண் ஒருவர் தன்னை வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டார். அவரையும் போலீசார் மீட்டு அறிவுரை கூறி மனு அளித்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஒரே நாளில் இரண்டு பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>