உலக சுற்றுலா தின சிறப்பு கருத்தரங்கம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் பலூன் பறக்கவிட்டார்.புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தின சிறப்புக் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

இக்கருத்தரங்கில் புதுக்கோட்டையில் பெருங்கற்கால சின்னங்கள் என்ற தலைப்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜவேலு, புதுக்கோட்டை வரலாற்றில் மத நல்லிணக்கச் சான்றுகள் என்ற தலைப்பில் முன்னாள் அருங்காட்சியகத்துறை உதவி இயக்குநர் முனைவர் ஜெ.ராஜா முகமது, புதுக்கோட்டை மாவட்ட குடைவரைக்கோவில்கள் என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், புதுக்கோட்டையில் கோட்டைகள் என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு. ராமு, மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா, வட்டாட்சியர் செந்தில்குமார், அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் நன்றி கூறினார்.

​முன்னதாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டார். ​பின்னர் புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தில் நகராட்சி சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

​இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>