திமுக சார்பில் ஐவர் கால்பந்து போட்டி

பொள்ளாச்சி : கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், உதயநிதி ஸ்டாலினின் 44வது பிறந்தநாளையொட்டி,  தகவல் தொழில்நுட்ப  அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் ஏற்பாட்டில், ஐவர் அணி கால்பந்து போட்டியானது, பொள்ளர்சசி வடுகபாளையத்தில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதனை, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி துவக்கி வைத்தார். அரையிறுதி போட்டியை நகர பொறுப்பாளர் வடுகை பழனிசாமி துவக்கி வைத்தார். இறுதி போட்டியை, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் துவக்கி வைத்ததுடன், இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இறுதி போட்டியில் முதல் இடத்தை திருப்பூர் ஜூனியர் அணியும், இரண்டாம் இடத்தை சாய் அனாமிக்கா சிட்ஸ் அணியும், மூன்றாம் இடத்தை கேரளா மஞ்சேரி அணியும் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம்.நாகராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன்,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாந்திதேவி, சார்பு அணி நிர்வாகிகள் சிவானந்தம், ஆறுமுகம், தங்கவேல், தனம், திருமலைராஜா, ஞானவேலர், ஈஸ்வரன்,  விஜயகுமார், பஞ்சலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>