×

திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பொது வினியோக திட்டத்திற்கு 2,500 டன் அரிசி அனுப்பிவைப்பு

திருவாரூர் : திருவாரூரிலிருந்து திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காக 2 ஆயிரத்து 500 டன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது.திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு காரீப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 71 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 11 வேகன்களில் ஆயிரத்து 250 மெ.டன் அரிசியும், திருவண்ணாமலை மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 11 வேகன்களில் ஆயிரத்து 250 மெ.டன் அரிசி மூட்டைகளையும் அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

Tags : Tiruvallur ,Thiruvannamalai , Thiruvarur: 2,500 tonnes of rice bundles from Tiruvarur to Tiruvallur and Thiruvannamalai districts for public distribution scheme
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு